உடலின் மிக முக்கிய உறுப்பு மூளை.இந்த முக்கிய உறுப்பு மண்டை ஓடு என்ற உறுதியான அமைப்பால் பாதுகாக்கப்படுகிறது.மண்டை ஓட்டின் மேற்பகுதியை சூழ்ந்துள்ள தோல் அமைப்பை உச்சந்தலை(Scalp) என்று அழைக்கிறோம். இதில் தோன்றும் நோய் அறிகுறிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதில்லை. ஆனால் இதில் தோன்றும் நோய் அறிகுறிகளுக்கு ஆரம்பத்திலேயே முக்கியத்துவம் கொடுத்து அதை சரி செய்வது எளிதாக நோயிலிருந்து வெளியேற உதவும்.
உச்சந்தலையில் தோன்றும் பொதுவான நோய் அறிகுறிகள்:
✓பொடுகு
✓அதிகப்படியான அரிப்பு
✓அரிப்பு ஏற்பட்டு சொரியும் போது வெள்ளை அல்லது மஞ்சள் நிற துகள்கள் வெளியேறுதல்
✓பேன்
✓முடி கொட்டுதல்
இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.